மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான முதலாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, இன்று துவங்குகிறது. இந்த வெளியீட்டில், தங்கத்தின் விலை, கிராமுக்கு, 4,777 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது இன்றுத் துவங்கி, 21ம் தேதியுடன் முடிவடைகிறது. வலைதளம் அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு 1 கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம் ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தனிநபர்கள் அதிகபட்சமாக 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் காலம் 8 ஆண்டுகள்.