கொரோனா பாதிப்பு குறைந்து குணமடைவோர் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே14ல் பாதிப்பு எண்ணிக்கை 3.26 லட்சமாகவும், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3.53 லட்சமாகவும் பதிவானது. மே 15ல் பாதிப்பு எண்ணிக்கை 3,11,170 என்ற அளவிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,62,437 என்ற அளவிலும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரமாகவும், நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரமாகவும் உள்ளது. சதவீத அடிப்படையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 84.25 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. தற்போது 14.66 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்தியாவில் 31 கோடியே 48 லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிகமாக, 18 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.