அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா, வரும் 2050ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து உலகெங்கிலும் விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கார் தயாரிப்பு தொழில்களில் தொய்வு ஏற்பட்டுள்ள போதிலும் இந்த நிறுவனம், தனது ஆராய்ச்சிகளை நிறுத்தவில்லை. கார் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் ‘ரோட்ஸ்டர்’ மாடல் கார்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2020ல் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த கார் அறிமுகம் ஆகும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளதால் கார் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த தகவலை, டெஸ்லா உறுதி செய்யவில்லை.