ஹிஜாப் வேட்பாளருக்குத் தடை

பிரான்சில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தற்போதைய அதிபரான மக்ரோனின் ‘லா ரிபப்ளிக் என் மார்ச்சே’ (எல்.ஆர்.இ.எம்) கட்சியின் சார்பில் சாரா ஜெம்மாஹி என்ற முஸ்லிம் பெண் வேட்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரை விளம்பரங்களில், அவர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடையுடன் தோன்றுவது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன் அக்கட்சி பொதுமக்களின் விமர்சனத்துக்கு ஆளானது. இதனால் ஜெம்மாஹி, தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்டானிஸ்லாஸ் குரினி தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரான்ஸில் சமீபத்தில் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள், புதிய சட்டங்கள் அமலானது. ‘பயங்கரவாதத்தை தூண்டும் இஸ்லாமியம் உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும்’ என்று பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள், தளபதிகள் அரசை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.