இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்களை கண்டிக்காமல், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாரதத்தில் உள்ள எதிர் கட்சியினர், நடுநிலைவாதிகள், ஊடகங்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி துணைத்தலைவர் அலி மெஹ்தி ‘இஸ்ரேலை அல்லாஹ் அழிப்பான்’ என்று கருத்து பதிவிட்டுள்ளார். இஸ்ரேலைக் கண்டிக்குமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பாரத அரசை கோரியதுடன் பாலஸ்தீனத்தின் பக்கம் கடவுள் உள்ளபோது அவர்களுக்கு ரட்சகர் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இதேபோல, பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், நகைச்சுவை நடிகை அக்ரிமா ஜோசுவா உள்ளிட்ட பலரும் பயங்கரவாத ஹமாஸுக்கு ஆதரவாகவே கருத்து பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்று குரல் கொடுப்பது பயங்கரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதற்கு சமம்தான்.