தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைக்க பட்டுவிட்டது. புதிய அரசின் முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னவாரு அதிரடியாக முதல் நாளன்றே ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியட்டுள்ளார். அதன்படி கொரோனா நிவரனமாக குடும்ப அட்டைக்கு இந்த மாதம் இரான்டயிரம் ரூபாய் , மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், ஆவின் பால் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கான செலவை அரசே ஏற்பது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலமாக பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமனம். புதிய தலைமை செயலாளர் போலீஸ் டி ஐ ஜி புதிய கமிஷனர் என்று தனது ஆட்சியின் முதல் நாளன்றே அதிரடி கட்டியுள்ளார். புதிய அரசு அதனால் இப்போதைக்கு பொதுமக்கள் இந்த அரசின் எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பது அவசியம்
மாநிலத்தில் முக்கிய பிரச்சமையான கொரோனா பெருந்தொற்று அதிரடியாக மக்களை பயமுறுத்தி வரும் வேளையில் பதினான்கு நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார் இதன்படி எதிர்வரும் மே 10 தேதி தொடங்கி மே 24வறை எல்லாவிதமான பெரு நிறுவனங்கள் கடைகள் தொழிற்சாலைகள் பொழுதுபோக்கு இடங்கள் கடற்கரைகள் உள்ளிட்ட அணைத்து பகுதிகளும் பொதுமுடக்கத்தை கடைபிடிக்க உள்ளது. , இந்த முழு ஊரடங்கு மூலம் மாநிலத்தில் அதிவேகமாக பரவி வரும் பெருந்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஒட்டு மொத்த நாடே இந்த பெரும் பிரச்சனையில் அல்லாடி கொண்டிருக்கும் நேரத்தில்தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு பொது மக்களும் அரசின் அறிவிப்பிற்கு மதிப்பளித்து தேவையின்றி வெளியில் அலைவதை தவிர்த்து கொண்டு இந்த பொது முடக்கத்தை வெற்றிகரமாக நடமுறைப் படுத்துவோம்.
அரசின் ஏனைய வாக்குறுதிகள் பல அணிவகுத்து நிற்கின்றன .எனினும் நமது உயிர் இருந்தால்தானே மற்றவற்றை பற்றி பேச முடியும் .அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றை முறியடிக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. . பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துவிடும் அன்றாடம் காய்ச்சிகள் கட்டட தொழிலாளர்கள் தெருவோர கடைகரர்கள் தலைச்சுமை வியாபாரிகள் காய்கறி விற்கும் பெண்மணிகள் கோயில்களின் முன்பாக பூக்கட்டுவோர்கள் யாசகம் பெறுவோர்கள் போன்றோரின் நிலை பரிதாபகரமானதாக அமைந்துவிடும். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நல்ல நடவடிக்கைகள் தேவை. சென்ற ஆண்டை போன்று பொது முடக்கம் மேலும் நீடிக்காமல் இருக்க பொது மக்களாகிய நாமும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமுக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து இந்த கொடிய கொரோனாவை விரட்டியடிக்க முயல்வோம்