பாரதத்தில் சட்டவிரோத மதமாற்றங்களை மேற்கொள்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த பிக் லைப் பெல்லோஷிப் என்ற அமைப்பு, ரூ. 1.54 கோடியை அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக பெற்றுள்ளது என – ‘பிக் லைப் பெல்லோஷிப்’ மீது எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) குற்றம்சாட்டியுள்ளது. அதன் முக்கிய செயல்பாட்டாளரான பெஞ்சமின் பிரான்சிஸ் என்பவர், கேசல் குரோவ் பாபிடிஸ்ட் சர்ச், நியூ கன்னான் சொசைட்டி, கார்ன்டன் பாப்டிஸ்ட் சர்ச் ஆகியவைகளிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தக்கோரி எல்.ஆர்.ஓ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.