பாரதத்தில் நடைமுறையில் உள்ள 1986ல் வகுக்கப்பட்ட பழமையான தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக, உலக கல்வித்தரத்திற்கு ஈடான ‘புதிய தேசிய கல்வி கொள்கை’யை நமது மத்திய அரசு அறிவித்தது. மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு இதற்கு ஒப்புதல் அளித்தது. பிறகு இது நடைமுறைக்கு வந்தது. புதிய தேசிய கல்வி கொள்கையை அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. அதில், தமிழ் மொழி இடம்பெறவில்லை என்ற கோரிக்கையை அடுத்து, education.gov.in/sites/upload_files/mhrd/files/nep/2020/tamil.pdf என்ற இணைய முகவரியில் தற்போது தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.