பாரத வரலாற்றில் முதன்முறையாக, ஜம்மு காஷ்மிரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1947 ல் சுதந்திரத்திற்குப் பிறகும் தனிக்கொடியுடன் இருந்த அம்மாநிலத்தில் சமீபத்தில் நமது மத்திய அரசு மேற்கொண்ட பெருமுயற்சிகளின் விளைவாக அங்கு, சட்டப்பிரிவுகள் 370, 35ஏ நீக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது அங்கு பாரதக்கொடி பறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கடந்த மார்ச் 26ல் வெளியிடப்பட்டது. அந்த சுற்றறிக்கையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் அடுத்த 15 நாட்களுக்குள் தேசியக் கொடி ஏற்றி பறக்கவிடுவதை உறுதிசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.