மேற்கு வங்கத்தில் தீவிர இஸ்லாமியவாதியான அப்பாஸ், புதிதாக உருவாக்கிய கட்சியான ‘இந்திய மதச்சார்பற்ற முன்னணி’ (ஐ.எஸ்.எப் ) உடன் காங்கிரஸ், இடதுசாரிகள் மேற்கொண்ட கூட்டணி முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டது. காங்கிரஸின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும், இதை தூய்மையற்ற கூட்டணி என விமர்சித்தார். கொரோனாவால் 50 கோடி ஹிந்துக்கள் இறக்க வேண்டும் என சாபமிட்டவர் அப்பாஸ். இந்நிலையில், ஐ.எஸ்.எப் கட்சியின் ஜியாருல் மொல்லாவின் வீட்டில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது. ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை, கருத்து வேறுபாடுகள் உள்ளன. காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஐ.எஸ்.எஃப், இடதுசாரிகளுடன் கைகோர்த்துள்ளது. ஆனால், கேரளாவில் இடதுசாரிகளுக்கு எதிராக போராடுகிறது. அசாமில் பதருதீன் அஜ்மலின் AIUDF உடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், அவர்களின் எதிரியான சிவசேனாவுடன் மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்துள்ளது. இது காங்கிரசுக்கு சித்தாந்தம் என்பதே இல்லை’ என்பதையே காட்டுகிறது என கூறினார்.