இது என்ன லாஜிக்

மேற்கு வங்கத்தில், ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த 2016 தேர்தலிலும் இதே கூட்டணிதான் அங்கு தேர்தலை சந்தித்தது. இதைத்தவிர, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளுடன் இவை கூட்டணி தேர்தலை சந்திக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சீன ஆளும் கம்யூனிச தலைவர்களுடன்கூட சோனியா குடும்பம் நல்ல நட்புறவில் உள்ளது. ஆனால், கேரளத்தில் மட்டும் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் எதிரெதிராக களம் காணுகின்றன. மற்ற மாநிலங்களில் இவர்களுடன் கொஞ்சி குலவும் ராகுல், கேரளத்தில் ‘செங்கொடி வைத்திருந்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமென்றாலும் கடத்தலாம்’ என வறுத்தெடுக்கிறார்.