வழக்கு விவரங்கள் வாட்ஸ்ஆப்பில் கிடையாது

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், வழக்குகள் ‘வீடியோ கான்பரன்ஸிங்’ முறையில் நடந்தன. வழக்கின் விசாரணை விவரங்கள், வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக வழக்கறிஞர்களுக்கும், நேரில் ஆஜராவோருக்கும் பகிரப்பட்டன. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து, மார்ச் ஒன்று முதல் வழக்கு விசாரணை விவரங்கள், வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பப்படாது. முன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ள, மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்பப்படும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.