திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கரில் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகள் கட்டி விற்பனை செய்தது. ஆனால் வீடுகளுக்கு சாலை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ல் பணி முடிப்பு சான்று வழங்கியுள்ளார் என குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளித்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.