ஹிந்து மகாசபா தலைவராக இருந்துவரும் பாபுலால் சவுராசியா, சமீபத்தில் முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். சவுராசியா, ஹிந்து மகாசபாவின் அலுவலகத்தை கோட்சேவின் கோயிலாக மாற்றியமைக்க அங்கு கோட்சேவின் சிலையை நிறுவ முயன்றார். சர்ச்சை வெடித்ததையடுத்து, காவல்துறையினர் சிலையை கைப்பற்றி வளாகத்தை மூடிவிட்டனர். ஹிந்து மகாசபா தலைவர் 2019ல் மீண்டும் இந்த கோரிக்கையை வைத்தார். நாதுராம் கோட்சேவின் செய்தியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பரப்புவதாக உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். பாஜ,கவை ‘கோட்சே வழிபாட்டாளர்களின்’கட்சி என்று விமர்சித்து வரும் காங்கிரஸ், தற்போது பாபுலாலை இணைத்துக்கொண்டது சம்பந்தமாக என்ன சொல்லப்போகிறது என காத்திருக்கின்றனர் ம.பி மக்கள்.