டெல்லி, மங்கோல்பூரி பகுதியில் வசிப்பவர் 26 வயதான பஜ்ரங்தள உறுப்பினர் ரிங்கு சர்மா. இவர் ஒரு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிவந்தார். அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் ரிங்கு சர்மா. கடந்த புதன்கிழமை அன்று அவரது வீட்டிற்குள் கத்தி, கம்புகளுடன் புகுந்த 30 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினர்களின் கண் முன்னால் ரிங்குவை குத்திக் கொலை செய்தது. அவரது சகோதரரையும் தாக்கி, அங்கிருந்த பொருட்களை களவாடி சென்றுள்ளது. முன்னதாக ஸ்ரீராம் ஜென்மபூமி கோயில் கட்டுவது தொடர்பாக கடந்த மாதம் இப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சிலர் ரிங்கு ஷர்மாவுடன் தகராறு செய்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டதையடுத்து சர்ச்சை தீர்க்கப்பட்டது. அவர்களே தற்போது திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறை முகமது இஸ்லாம், டேனிஷ் நஸ்ருதீன், தில்ஷான், தில்ஷாத் இஸ்லாம் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடைய கர்பிணி மனைவிக்கு ரிங்கு சர்மா ரத்ததானம் அளித்து காப்பாற்றியுள்ளார் என்பதும் இறக்கும் தறுவாயில் ஜெய் ஸ்ரீராம் என உச்சரித்துக்கொண்டே உயிர் துறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.