குஜராத், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி, கோவிந்த்பாய் தோலகியா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ .11 கோடியை தன் பங்களிப்பாக அளித்தார். சூரத்தைச் சேர்ந்த மகேஷ் கபுத்தர்வாலா ரூ .5 கோடியையும், லவ்ஜி பாட்ஷா ரூ. 1 கோடியையும் வழங்கியுள்ளனர். குஜராத்தில் ரூ. 5 முதல் 21 லட்சம் வரை நன்கொடையாக பல வர்த்தகர்கள் அளித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் கோர்டன் சதாபியா, பொருளாளர் சுரேந்திர படேல் ஆகியோரும் சமீபத்தில் ராமர் கோயிலுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர பகதூர் ஒரு கோடியே 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ,குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநில கவர்னர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.