போகிப்பண்டிகை

போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்குவது தமிழகத்தில் பல பகுதிகளில் வழக்கம்.

பறை கொட்டி மகிழ்ச்சி:

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய தட்டு முட்டுச் சாமான்கள் போன்ற பொருட்கள் ஒதுக்கப்படும். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். படத்தில் பாருங்கள் முகில், ஜெகதீஷ், தருண் என்கின்ற மூன்று பள்ளிச் செல்லும் சிறார்கள், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாங்களே தயாரித்த பறையை கொட்டி எவ்வளவு மகிழ்ச்சித் துள்ளலுடன் போகியைக் கொண்டாடி, பொங்கல் பண்டிகையையும் வரவேற்கிறார்கள் என்று. இடம்: சீரணிபுரம், நுங்கம்பாக்கம்.
ஜெ.கே