ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் மொத்த முள்ள 280 தொகுதி களில் பா.ஜ.க தனியாகவும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குப்கர் கூட்டணி என்ற பெயரிலும் தேர்தலை சந்தித்தன. இதில், பா.ஜ.க 74 இடங்கள், குப்கர் கூட்டணி 110 இடங்கள், சுயேச்சைகள் 49 இடங்கள், காங்கிரஸ் 26 வென்றுள்ளது. 370 சட்ட நீக்கத்திற்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர்தலில் 52 சதவீத மக்கள் வக்களித்துள்ளனர். இதில் கடந்த 70 ஆண்டுகளாக வாக்குரிமை மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்களான வால்மீகி சமுதாய மக்களும், பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்துள்ள சிறுபான்மை இந்துக்களுக்கும் முதல் முறையாக வாக்களித்துள்ளனர்.