வன்முறை வழியில் பா.ம.க

ன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு நேற்று சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வை பாதித்துள்ளது பா.ம.கவின் போராட்டம். கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பொது போக்குவரத்தை முடக்குவது சரியா?

முன்னர் மரங்களை வெட்டிப்போட்டு சாலை, ரயில்களை மறித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முனைந்தார் ராமதாஸ். அதே யுக்தி தற்போதும் பயன் தரும். கரையும் தன் கட்சியின் எதிர்காலத்தையும், தன் மகனின் அரசியல் எதிர்காலத்தையும் இந்த போராட்டங்களின் மூலம் தக்க வைக்கலாம் என ராமதாஸ் எண்ணுகிறார் போலும். தற்போது காலம் மாறி விட்டது. இந்த போராட்டங்களினால் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மக்கள் ஆதரவு, ஜாதி ஆதரவுகளை மொத்தமாக கெடுத்துக் கொள்ள ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாகவே தெரிகிறது.