தாய்மொழி கல்வி, விளையாட்டு முறையில் கல்வி, விருப்ப படங்களை மாணவர்களே தேர்வு செய்தல், ஒவ்வொரு வருடத்திற்கும் சான்றிதழ், இடைநிற்றல் இல்லா கல்வி என பல சிறப்புகள் கொண்டது புதிய தேசிய கல்விக் கொள்கை.
தேர்வுகள் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் சுமையாக இல்லாமல் அதை புரிந்து கொள்ளும் சுகமாக உருவாக்கபட்டுள்ளது. இதில் கற்றல் குறைபாடு களைவு, கற்றல் விளைவுகளை நிர்ணயித்தல்களுக்காக புதிய 60 அம்ச செயல்திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கற்றல் என்பது இனிமையாக இருக்கவேண்டுமே தவிர, சுமையாக இருக்கக்கூடாது. இதனை மனதில் கொண்டு வெளிநாட்டு கல்விமுறைக்கு இணையாக தயாரிக்கப்பட்டதுதான் புதிய கல்விக்கொள்கை.