பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வேலை தேடுவோர் பயன் பெற ‘நேஷனல் கேரியர் சர்வீஸ் (என்.சி.எஸ்)’ எனும் ஒரு அமைப்பை துவங்கியுள்ளது.
வேலை தேடுவோர், அரசு, தனியார் நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், தொழில் வழிகாட்டிகள், ஆலோசகர்கள் என பலரையும் ஒருங்கிணைக்கும் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த என்.சி.எஸ்’சில் இவர்களை தவிர உள்ளூர் சேவை வழங்குபவர்களான பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன், ஓட்டுனர்கள் போன்றோரும் தங்கள் சேவைகளை பதிந்து பயன் பெறலாம். வேலைவாய்ப்பு முகாம்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
கணினி, அலைபேசி தேடுதளங்கள், பொதுசேவை மையங்கள், தபால் அலுவலகங்கள், வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் என பல வழிகளில் மக்கள் இதில் பதிவு செய்ய முடியும். இதில் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன.
தமிழகத்தில் மட்டுமே 10,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் தற்போது இதில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மேற்கொண்டு தகவல்களை பெற https://www.ncs.gov.in எனும் இணையதளத்திலும், 1800-425-1541 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பேசி தகவல் பெறலாம்.
செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த எண்ணில் தகவல் பெறலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் தகவல் பெறும் வசதியும் உள்ளது. கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்கள், புதிய வேலை தேடுபவர்கள், வேலைக்கு ஆட்கள் தேடுபவர்கள் என அனைவரும் இதில் ஏற்கவே பதிவு செய்து பலனடைந்து வருகின்றனர். நீங்கள்…?