சி.ஏ.ஏ போராட்டம் எனும் பெயரில் நடைபெற்ற பயங்கரவாதங்கள், கொலைகள் அனைத்தும் முஸ்லிம் அமைப்புகள், இடதுசாரிகள் என பலரும் திட்டமிட்டு நடத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் சில வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்புள்ளது.
பிரபல ஸ்காட்டிஷ் இடதுசாரி வரலாற்றாசிரியர் வில்லியம் டர்லிம்பில், சி.ஏ.ஏ குறித்த உண்மைகளை வெளியிட்ட ‘டெல்லி ரியாட்ஸ் – தி அண்டோல்ட் ஸ்டோரி’ எனும் புத்தகத்தை திரும்பப் பெற புளூம்ஸ்பெரி நிறுவனத்தை வற்புறுத்தினர்.
காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அவர் பாரதத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது பாஸ்போர்ட் ,விசாவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் மோனிகா அரோரா வெளியுறவு துறையில் புகாரளித்துள்ளார்.
வில்லியம் மட்டுமல்ல, சென்னை ஐ.ஐ.டி மாணவர்- ஜாக்கோப் லிந்திடால் (ஜெர்மனி) கொச்சியில் தங்கியிருந்த ஜென்னி மெட்டி ஜான்சன் -(நார்வே). கொல்கத்தாவில் வாழ்ந்த அப்சரா அனிகாமீம் – (பங்களாதேஷ்). இவர்களும் சி.ஏ.ஏ கலவரக்காரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இது குறித்து விசாரித்த உள்துறை அமைச்சகம் அவர்களை நாட்டை விட்டு வெளியேறியது. ‘நம் தேச விவகாரங்களில் தலையிடும் அனைத்து அந்நிய சக்திகளும் ஒடுக்கப்பட வேண்டும்.
சி.ஏ.ஏ கலவரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அட்டூழியம் செய்ததை அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் கண்டறிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.