தமிழகமும், வேலையில்லா திண்டாட்டமும்

சில தினங்களுக்கு முன் விமானத்தில் வெளிமாநில தொழிலாளர்களை கூட்டமாக அழைத்து வந்திருந்தார் ஒரு முகவர். தமிழகம் சகஜ நிலைக்கு திரும்புவதால், கொரோனாவால் வெளியேறியவர்கள் மீண்டும் திரும்புகின்றனர். 2019-ல் தமிழகத்தில் வேலை செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 19 லட்சம். வேலையில்லா திண்டாட்டம் என்பது தமிழக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மட்டும் இங்கு எப்படி வேலை கிடைக்கிறது, நம்மவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை, எது தடுக்கிறது? என பல கேள்விகள் எழுகின்றன. தொழில்துறையினரோ, வேலைதர தயார். ஆனால் இவர்கள் வருவதில்லை. வந்தாலும் அர்பணிப்புடன் பணியாற்றுவதில்லை என்கின்றனர். ஊரெங்கும் டாஸ்மாக், போராட்டம் என்றால் ரூ. 200, பிரியாணி, மது என கொடுக்கும் கழகங்கள். இலவசங்கள், தூண்டி விடும் தொழிற்சங்கங்கள், வேறு மொழிகள் தெரியாது, ஒயிட் காலர் ஜாப் ஆசை போன்ற காரணங்களினால் உடலை வருத்தி உழைக்க இளைஞர்கள் பலர் யோசிக்கின்றனர். ஆனால் வெளிமாநில தொழிலாளர்கள் சம்பளம் குறைவு, நல்ல உழைப்பு, அரிதாக விடுமுறை, என்பதால் வேலை கிடைக்கிறது. இதை நாமும் சிந்திக்க வேண்டும். பிரச்சனை நம்மிடம்தான் உள்ளது. அதை உணர்ந்து நாம் மாற வேண்டும்.

அடிமையாக இருக்க சொல்லவில்லை ஆனால் நேர்மையாக, கடினமாக உழைப்போம். தீய பழக்கங்களை விடுவோம். குடும்பத்தையும் தமிழகத்தையும் முன்னேற்றுவோம்.