திமுகவின் ஓட்டு வங்கி அரசியல்

வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த நாட்களுள் ஒன்று செப்டம்பர் 11-. அன்று விவேகானந்தரின் சிகாகோ உரை, பாரதியாரின் நினைவு தினம், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், வினோபா பவே பிறந்த தினம், அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு என பல முக்கிய நிகழ்வுகள் அன்று நிகழ்ந்துள்ளன. அன்று திமுக அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் படத்துக்கு மரியாதை செய்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் அவர் விவேகானந்தரை குறித்து பேசவில்லை. இது எதிர்பார்த்ததுதான்.

காந்தியின் சீடர், பூமிதான இயக்கம் நடத்திய வினோபா பவேயையும் மறந்துவிட்டார். ஆனால் தமிழகத்தில் பிறந்த, தமிழ் கவிஞரான பாரதியாரையும் எப்படி மறந்தார்? மக்களின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பிய வீர கவிஞரல்லவா பாரதியார்? ஸ்டாலினின் ஆலோசனை குழு இதை நினைவூட்டவில்லையா அல்லது இவர்களின் பெயர்களை சொன்னால் ஓட்டு விழாது என்பதற்காக மறந்துவிட்டாரா ஸ்டாலின்? அரசியல் தலைவர்கள் பேதம் பார்க்க கூடாது. மக்களிடம் அதை பரப்பவும் கூடாது.

 

 

தேசத்திற்காக உண்மையாக உழைத்த தலைவர்கள் அனைவரும் சமமே. இதில் பேதங்கள் ஏதும் இல்லை. ஆனால் ஓட்டு வங்கி யாருக்கு உள்ளது, யாரை புகழ்ந்தால் ஓட்டுகள் கிடைக்கும் என கணக்கு போட்டு அவரை மட்டும் புகழ்வது மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. அதிலும், ஆட்சியை பிடிப்போம் என எந்த நேரமும் முதல்வர் கனவில் மிதக்கும் தமிழக எதிர்கட்சி தலைவருக்கு இது முறையா?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர் இம்மானுவேல் சேகரன், அவருக்கு மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஓட்டு வங்கியை மட்டுமே குறிவைக்கும் திமுகவின் செயல்களே வருத்தமளிக்கின்றன. செயல்படுவோம்.