அக்டோபர் 31 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறைச்சாலையில் காவலரை தாக்கி கொலை செதுவிட்டு, தப்பிச்சென்ற சிமி இயக்க பயங்கரவாதிகள் 8 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல்வேறு மாநிலங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக சிறையில் இருந்த இந்த எட்டு நபர்களில் இருவர் சென்னை ரயில் நிலையத்தில் வெடித்த குண்டு வெடிப்பின் குற்றவாளிகள்.
சம்பவம் நடந்த பின்னர் வழக்கம் போல், காங்கிரஸ், இடதுசாரி கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி ஆகியவை நடந்த என்கவுன்டர் போலியானது என்றும் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இன்னும் ஒரு படி மேலே போ உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். சிறையில் பணியிலிருந்த காவலர் படுகொலை செயப்பட்டதை கண்டு கொள்ளவில்லை. அந்த காவலரை மறந்துவிட்டு கொல்லப்பட்ட எட்டு பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் செயலை மட்டுமே செகிறார்கள். ஊடகங்களும் தங்கள் பங்குக்கு பயங்கரவாதிகளுக்கு ஆதரவான குரலையே முன் வைக்கிறார்கள். சிமி இயக்கம் பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிமி: வன்முறை, தேசத்துரோகம்
மத்தியப் பிரதேச சம்பவத்தின் அடிப்படையில் தமிழக ஊடகங்களில் வந்த செதி வியப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்காக துவக்கப்பட்டது சிமி இயக்கம்” (காலைக் கதிர் 1.11.2016). இது முற்றிலும் தவறான செதி. 1977 ஏப்ரல் 25 அன்று அலிகார் பல்கலைக் கழகத்தில் துவக்கப்பட்டபோது, இதன் மூலக் காரணம், செயல் திட்டம், இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியல் சாஸனத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை. ஒவ்வொரு இந்தியனையும் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றுவோம், தேவைப்பட்டால் வன்முறை கொண்டு இந்தியர்களை முஸ்லிமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே முஸ்லிம் நாடாக மாற்றுவோம்.” (ஆதாரம் ப.ராகவன் எழுதிய துப்பாக்கி மொழி, சிமியின் வெப்சைட்) என தெளிவாக குறிப்பிட்டுள்ளது!
2001ம் ஆண்டிலிருந்து பாரத தேசத்தில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களிலும் சிமி இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. மும்பை, பெங்களுர், ஹைதராபாத், வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருகை தரும் கோவா போன்ற இடங்களில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களில், தாக்குதல் நடத்திய அமைப்புகளுக்கு முழு உதவி புரிந்தவர்கள் சிமி ஆட்கள். ஆகவே முழுக்க முழுக்க தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் செயலாற்றிய இவர்கள், சிறைக் காவலரை கொன்றுவிட்டு, தப்பியோடியபோது நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்கள் என்றவுடன் நீதி விசாரணையை கேட்கும் கட்சிகளின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட சிமி அமைப்பினர் எட்டு பேரும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்களில் பலரும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கைது செயப்பட்டவர்கள். என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவர் 2013ல் காண்ட்வா சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்கள், மூன்றாண்டு தேடுதலுக்கு பின்னர் கைது செயப்பட்டார்கள். 2001லிருந்து 2004 வரை உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரத்தின் போது, ஐந்து போலீஸாரையும், கான்பூர் மாவட்ட அடிஷனல் மாஜிஸ்ட்ரேட்டையும் படுகொலை செதவர்கள் சிமி ஆட்கள்.
மும்பையின் காவல் துறையின் என்கவுன்டர் நடத்துவதில் திறமைவாந்த இன்ஸ்பெக்டர் பிரதாப் சர்மா என்பவர் 104 கொலை செதுள்ளார். கொலையானவர்கள் பயங்கரவாதிகள்; மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த துணை புரிந்தவர்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிமி ஆட்களும் அடங்குவார்கள். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியோ அல்லது இடதுசாரி அமைப்புகளோ அன்று கோரிக்கை வைக்கவில்லை. காரணம் மகாராஷ்ராவிலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி செதது.
2001-ல் சிமி மீது தடை விதித்த பின்னர், தங்களின் இயக்கத்தின் பெயரை மாற்றிக் கொண்டார்கள். தங்களின் இயக்கத்திற்கு நிதி தேவைப்படுவதால் அபு பைசல் என்பவர் தலைமையில் வங்கிகளை கொள்ளையடிப்பதற்காகவே Maal-e-Ganimat என்ற பெயரில் ஒரு இயக்கம் துவக்கப்பட்டது. 2010-ல் முன்னாள் சிமி இயக்கத்தினர் பல்வேறு வங்கிகளில் கொள்ளையடித்த சம்வங்கள் நடந்துள்ளன. இவ்வாறு தொடங்கப்பட்ட முக்கிய இயக்கங்களில் இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கத்தில் முக்கிய பொறுப்பாளராக இருந்த அப்துல் சுபான் குரேஷி, ரியாஸ் பட்கல் போன்றவர்களால் துவக்கப்பட்டது. இது தமிழகத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலும் கேரளத்தில் ‘நேஷனல் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்’ என்ற பெயரிலும் துவக்கப்பட்டது.
காங்கிரஸ் இரட்டை வேடம்
2001 செப்டம்பர் 27 அன்று சிமி மீது மத்திய அரசு தடை விதித்தது. பொடா சட்டம் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, எந்த பயங்கரவாத செயலிலும் ஈடுபடாத” சிமி மீது விதிக்கப்பட்ட தடையை கண்டித்து பேசினார்! மேலும் சிமி மீது தடை விதித்தால் இந்தியாவில் பயங்கரவாதத்தை தடுக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015-ல் சிமி மீதான தடையை நீடிக்க எந்த முயற்சியும் எடுக்காததாலும் முறையான சாட்சிகளையும் முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்காததாலும், தடை நீக்கப்பட்டது. ஆறு மாதத்திற்கு பின்னர் உடனடியாக புதிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மீண்டும் தடை நீடிக்கப்பட்டது. ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு சிமி மீதான தடை விதிப்பில் அக்கறை கிடையாது.
ஸ்ரீ பிரகாஷ் ஜெவால் பிரதேச காங்கிரஸ் தலைவராக 2001ல் இருந்தபோது, விஷ்வ ஹிந்து பரிஷத்தை விட சிமி மோசமான பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று கூறினார். ஆனால் இவரே உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, 2006-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் சிமி இயக்கத்தினர் ஈடுபட்டார்கள் என கூறி சிமி மீதான தடையை கொண்டு வர வேண்டும் என பேசினார். 2007-ல் ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இவர், சிமி அமைப்பினருக்கு லஷ்கர் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. லஷ்கர் அமைப்பினரின் உதவியுடன் ஆயுதங்கள் சேமித்து வைத்துள்ளார்கள். சிமி அமைப்பினரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது அளவுக்கு அதிகமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தார்.
2006ல் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சிமி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சிமி இயக்கத்தின் வக்கீலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனவர் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சல்மான் குர்ஷித். உச்ச நீதிமன்றத்தில் சிமிக்கு ஆதரவாக வைத்த வாதம் ஆச்சரியமானது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் கிடையாது, தேச விரோத செயலில் ஈடுபட்டதற்கான சாட்சிகளும் கிடையாது. சிமி முழுக்க முழுக்க கலாச்சார அமைப்பாகும் என குர்ஷித் தெரிவித்தார். இந்த நாட்டின் அரசியல் சாஸனத்தை ஏற்க மாட்டோம் என அறிவித்த ஒரு இயக்கத்தை, கலாச்சார அமைப்பு என குறிப்பிடுவது சரியானதா என்பதை கூட காங்கிரஸ் தலைவர்கள் ஆவு செயவில்லை. ஆனால் 2006 நவம்பர் 6 அன்று சிமி மீதான தடையை நீக்கமுடியாது என இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு தெளிவான தீர்ப்பு வழங்கியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜ சிங், சிறையிலிருந்து முஸ்லிம்கள் மட்டுமே தப்பி ஓடுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான முஸ்லிம்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள் என்பதையும் நினைவுப்படுத்தி அறிக்கை விட்டிருக்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் சிமி மீதான தடையை முதலில் விதித்தவர் திக்விஜ சிங் என்பதையும் ஏன் தடை விதிக்கப்பட்டது தற்போது பொதுமக்கள் மத்தியில் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், தடை செயப்பட்ட சிமி ஆட்கள், ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா’ என்ற பெயரில் புதிய இயக்கத்தை துவக்கினார்கள். இது பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் கேரள மாநில உளவுத் துறையின் தலைவர் தாக்கல் செத வாக்குமூலத்தில், Popular Front of India is the new face of banned extremist outfit SIMI and is engaged in anti-national activities என குறிப்பிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சியினர் கண்டு கொள்ளவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமாக கைது செயப்பட்ட சிமி இயக்கத்தைப் பற்றிய கருத்துக்களை திருமதி சோனியா காந்தி முன் வைக்கவில்லை.
கம்யூனிஸ்ட்:
கொலைகார வரலாறு
காம்ரேட்கள் நேரடியாக தொடர்பில் இல்லை என்றாலும், தங்களின் சகோதர இயக்கத்தின் மூலமாக பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இந்தச் செயலை People’s Union for Democratic Rights என்ற அமைப்பு, சிமி மீதான தடையை நீக்க வேண்டும், கைது செயப்பட்ட சிமி அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்துசெது விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் மனு கொடுத்தார்கள். ஒடிஸா மாநிலத்தில் கண்டவால் மாவட்டத்தில் அமைதியாக மக்கள் நலப் பணிகள் செது கொண்டிருந்த சுவாமி லஷ்மணாந்தர் கொலை செயப்பட்டபோது நீதி விசாரணை தேவை என்று குரல் கொடுக்கக் கூட முடியாத இடதுசாரிகள், சிறுபான்மையினர் எனக் கூறப்படுவோர் தாக்கப்பட்டு விட்டால் மட்டும் கொதித்து எழுவது ஏன் என்பது புரியவில்லை.
முப்பது ஆண்டுகள் இடதுசாரி கூட்டணி மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது மாவோயிஸ்ட்கள் தாக்கியதில் 134 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 1977 முதல் 1996 வரை 1,473 பேர் அரசியல் காரணங்களுக்காக கொலை செயப்பட்டார்கள். இன்று 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை கேட்கும் பிருந்தா காரத், தாங்கள் ஆட்சி செத மாநிலத்தில் நடந்த கொலைகளுக்கு நீதி விசாரணை நடத்தினார்களா என்பதை முதலில் விளக்க வேண்டும்.
கேரளத்தில் இடதுசாரிகளின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தொடர்ச்சியாக படுகொலை செயப்படுகிறார்களே, அது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த இடதுசாரிகள் முன் வருவார்களா என்பதையும் பிருந்தா காரத் தெரிவிக்க வேண்டும். நூற்றுக் கணக்கான தேச பக்தர்கள் கொலை செயப்பட்டதை கண்டு கொள்ளாத இடது சாரிகள், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டும் சந்தில் சிந்து பாட வந்து விடுவார்கள்.
முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் பற்றிய உண்மை கண்டறியும் குழுக்கள் வேலை செயாது. ஆனால் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி விட்டால் கண்ணபிரான்களும் மார்க்ஸ்களும் கையில் பேடுடனும் கிளம்பி விடுவார்கள்.
இவர்களுக்காகவே செதி ஊடகங்கள் வலம் வருகின்றன. அக்டோபர் மாதம் 31ம் தேதி நடந்த சம்பவத்தை பற்றிய விவாதம் தமிழக ஊடகங்களில் வலம் வரவில்லை. ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. பொது சிவில் சட்டத்தை பற்றி ஜவஹருல்லாவிடம் பேட்டி எடுக்கும் கலைஞர் டி.வி, போபால் சம்பவத்தை பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.