அமெரிக்காவுடனான நமது உறவில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அங்கு இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்.இவர்கள் தங்கள் துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியும் , அமெரிக்க சமுதாயத்துடன் இயைந்தும் ,நல்லுறவு கொண்டும் வாழ்கின்றனர். அமெரிக்காவில் பொதுவாக இந்தியர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. பிரதமர் மோடியின் அரசியல் எழுச்சிக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது. ஆகவே நமக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல உறவு இருக்கும். இருக்க வேண்டும்.இதையும் நாம் யோசிக்க வேண்டும்.நமது பிரதமருக்கு இது தெரியாதா என்ன? சீனாவைப் போலல்லாமல் அமெரிக்காவும்,பாரதமும் ஜனநாயக நாடுகள். சீனாவுடன் இருப்பது போல் அமெரிக்காவுடன் நமக்கு எல்லை தாவா கிடையாது. சீனா 1962ல் நம் நாட்டின் மீது படையெடுத்து பல ஆயிரம் சதுர மைல்களைக் கைப்பற்றியுள்ளது. இப்போதும் அது அருணாசல் பிரதேசத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறது. முன்பு திபேத்தின் மீது படையெடுத்து அதைப் பலவந்தமாகக் கைப்பற்றியது. அதைச் சுற்றியுள்ள தாய்வான், வியட்நாம், ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் கடல் எல்லை மற்றும் தீவுகள் தொடர்பாகப் பிரச்னை செய்து கொண்டிருக்கிறது. இன்னும் அதன் நாடு பிடிக்கும் வெறி அடங்கவில்லை. சீனா நம்பத் தகுந்த நாடல்ல. நமக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள நெருக்கம் சீனாவைக் கட்டுக்குள் வைக்க உதவும். அதனாலேயே இங்குள்ள சீனக் கைக்கூலிகள்,நக்சலைட்டுகள் மற்றும் ஊழல்,தேச துரோகப் பெருச்சாளிகள் வயிறு எறிகிறார்கள்.அதன் வெளிப்பாடே ‘மோடி ட்ரம்புக்குப் பயந்து விட்டார்’ என்ற பிரச்சாரம். பாரத-அமெரிக்க உறவு எதிர்காலத்தில் இன்னும் வலிமையாகும் என்பதில் ஐயமில்லை. நம் நாடு நாசமாகிவிட வேண்டும் என்று வேலை செய்யும் துரோகிகளுக்கு , முக்கியமாகக் கம்யுனிஸ்டுகளுக்கும், செய்தி ஊடகங்களுக்கும் ,போலி அறிவு ஜீவிகளுக்கும் மேலும் வேலைப்பளு அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.நூற்றுக்ககணக்கான பொய்கள், திரிபுகள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டியிருக்கும்.
ஸ்ரீதர்