9 ஆவது ஆசிய மகளிர் ஹாக்கி: பாரதம் மீண்டும் சாம்பியன்

 

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்ற 9 ஆவது ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் பாரதம் சாம்பியன் பட்டம் வென்றது. எட்டு நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் ஏ பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா ஆகிய நாடுகளும் பி பிரிவில் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்றன. பாரதம் முதல் நிலை போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.

அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட பாரதம் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சீன அணிக்கு கிடைத்த பெனால்டிக்கான வாய்ப்பினை பாரதத்தின் கோல்கீப்பர் சவிதா சாமர்த்தியமாக தடுத்தார். தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிய இந்திய அணி, நவ்ஜோத்கவுர் முதல் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் சீனா வீராங்கனைகளால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் சீன அணி பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது. மேற்கொண்டு இரு அணிகளும் பல முறை போராடியும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில்  பின் போட்டியின் முடிவுக்காக பெனால்டி ஷூட்அவுட் முறையில் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. பாரதத்தின் சார்பில் ராணி, மோனிகா, நவ்ஜோத், லிலிமா மின்ஸ் ஆகியோர் தங்களது  வாய்ப்புகளை பயன்படுத்தி 4 ககோல் அடித்தனர். சீனா சார்பில் கோலடித்தனர்.  மீண்டும் போட்டி 4-4 என்ற சமநிலையை எட்டியது. வெற்றியாளரை தீர்மானிக்க சடன் டெத் முறையில் பாரதத்தின் ராணி, கோல் அடித்தார். சீனா வீராங்கனை தவற விட, இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சடன் டெத் முறையில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய மகளிர் ஹாக்கி கோப்பை மீண்டும் பாரதத்தின் வசமானது. இது நமது அணி பெறும் இரண்டாவது கோப்பை. இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 2018 ஜூலையில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடி தகுதியும் கிடைத்துவிட்டது.

 

**********************************************************

இதோ ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!

நவம்பர் 8, 2017 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திஷா கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த 15 வயது  இடது கை மித வேக பந்து வீச்சாளர் ஆகாஷ் சௌத்ரி பேல் அகாடமிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

**********************************************************