ஜெர்மனியில்நடைபெற்ற24வது நார்ட் வெஸ்ட் 2023 (Nord west 2023) கோப்பை செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த இல் இல்ஜா ஸ்னைடரை (IM Ilja Schneider) தோற்கடித்து சென்னையை சேர்ந்த என்.ஆர். விக்னேஷ் வெற்றிப் பெற்றுள்ளார். ரேட்டிங்கில் 2,500 புள்ளிகளைத் தாண்டி பாரதத்தின் 80வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அவர் வென்றுள்ளார். விக்னேஷின் சகோதரர் விசாக் 2019 பாரதத்தின் 59வது செஸ்கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர்கள் பாரதத்தின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் சகோதரர்கள் என்ற பெருமையை பெறுகின்றனர். 80வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற விக்னேஷ் இது குறித்து பேசுகையில், “கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றது ஒரு மகிழ்ச்சியான தருணம். செஸ் விளையாட்டில் மேலும் பல சாதனைகளை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்த பட்டத்தை என் தந்தைக்கும் எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்”என்று தெரிவித்தார்.