சக்திவாய்ந்த 6 பாரத பெண்கள்

உலகில் பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் இரண்டாம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3வது இடத்தையும் பிடித்து உள்ளனர். இந்த பட்டியலில் பாரதத்தில் இருந்து 6 பெண்கள் இடம்பிடித்து உள்ளனர். பாரதத்தின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 36வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அவர், தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த முறையும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இப்பட்டியலில்பாரதத்தை சேர்ந்த ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் 53வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி பக் 54வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67வது இடத்தையும் பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா 72வது இடத்தையும் நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89வது இடத்தையும் பிடித்துள்ளனர்.