முஸ்லிம் மதகுருக்களால் 50 கோடி இழப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தலைக்குப் பரிசு அறிவித்த அஜ்மீர் தர்காவின் மூன்று முஸ்லிம் மதகுருக்களின் அறிக்கைகள் காரணமாக அஜ்மீரில் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இது அங்குள்ள கடைக்காரர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரின் வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது. இந்த ஈத் வியாபாரத்தில் சுமார் 90 சதவீத நஷ்டத்தை சந்தித்துள்ளோம், அஜ்மீர் தர்காவிற்கு அருகில் ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, தர்காவின் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது என உள்ளூர் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஜன்னத் குரூப் ஆஃப் ஹோட்டல்களின் உரிமையாளர் ரியாஸ் கான், ‘அஜ்மீருக்கு வரும் மக்கள் மீது வெறுப்பு அறிக்கைகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. மக்கள் பயந்து வெளியே வருவதில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அது காட்டுமிராண்டித்தனமான கொலை வழக்கிற்குப் பிறகு அஜ்மீரின் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார். தர்கா பஜார் வணிக சங்கத்தின் தலைவர் ஹாட்சந்த் ஸ்ரீனானி, “அனைத்து கடைகளும் விற்பனையாளர்களும் சும்மா அமர்ந்திருக்கிறார்கள். 50 கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகள் கூட காலியாகவே இங்கு வருகின்றன”என்று கூறியுள்ளார்.