பாரத மாணவர்களுக்கு 400,000 பவுண்ட் உதவித்தொகை

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பயிலும் பாரத மாணவர்களுடன்கலந்துரையாடினார். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இளைஞர்களை மையமாகக் கொண்ட கொள்கைகளின் காரணமாக பாரதத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது சிறந்த தருணமாக உள்ளது. பாரத இளைஞர்களுக்கு தற்போதைய காலம் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் அவர் பல இடையூறுகளை நீக்கியுள்ளார். இதனால் இளைஞர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. விண்வெளித் துறை தனியார் பங்கேற்பாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது இத்ற்கு ஒரு எடுத்துக்காட்டினார். இப்போது விண்வெளித் துறையில் கூட நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. ஸ்டார்ட்அப் இயக்கத்திற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஊக்கம் அளித்துள்ளார். இதன் விளைவாக 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் இந்த எண்ணிக்கை 350ல் இருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது. முன்னர் புறக்கணிக்கப்பட்ட உயிரி தொழில்நுட்பத் துறையும் தற்போதைய அரசால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றிக்குப் பிறகு மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார். டாக்டர் ஜிதேந்திர சிங், லண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு வருகை தந்த நேரத்தில் அக்கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் படிக்கும் பாரத சமூகமாணவர்களுக்கு 400,000 பவுண்ட் உதவித்தொகையை அறிவித்துள்ளது. அதில் 50 சதவீத உதவித்தொகை பாரதத்தில் இருந்து வரும் மாணவிகளுக்கு வழங்கப்படும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் இம்பீரியல் கல்வியாளர்கள் 300க்கும் மேற்பட்ட பாரத நிறுவனங்களில் இணைந்து 1,200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். கல்லூரியில் தற்போது 700 பாரத மாணவர்கள் பயில்கின்றனர்.