எல்லையில் பெரிய ஊடுருவலுக்கு திட்டமிட்டு உள்ள பாகிஸ்தான் 4000 இளைஞர்களுக்கு பயிற்சி
ஐநா பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எல்லை கட்டுப்பாடு முழுவதும் பெரிய ஊடுருவலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. 4000 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்து உள்ளதாக இராணுவ ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் ஜமாத் உல்-அல்-ஹதீஸுடன் இணைந்து அக்டோபர் முதல் வாரத்தில் இந்திய எல்லையில் ஊடுருவ ராவல்பிண்டியில்-4000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் சில இளைஞர்களும் அடங்குவர்.இந்த பயிற்சியின் நோக்கம் இந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக்குவதும், அக்டோபர் முதல் வாரத்தில் எல்லையில் ஊடுருவக்கூடிய வகையில் அவர்களை கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளுக்கு அனுப்புவதும் ஆகும்
நியூயார்க்கில் நடைபெறும் ஐநா பொதுக்கூழு கூட்டம் முடிந்ததும் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது இந்திய பாதுகாப்புப் படைகள் அவர்களை குறிவைத்தால், மனித உரிமை மீறல் பிரச்சினையை பாகிஸ்தான் மீண்டும் எழுப்ப முடியும் என்பதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்த ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
, பாதுகாப்பு இடங்களுக்கு பாகிஸ்தான் இராணுவத்துடன் அனுப்புவதில் நிறுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பாகிஸ்தான் மீண்டும் அதிகரித்துள்ளது.இதன் விளைவாக, இந்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதில், கண்காணிப்பை அதிகரித்து உள்ளனர். மேலும் உயர்மட்ட கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி உள்ளனர்.