வகுப்புவாதத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கர்நாடகாவில் சுதந்திர தினத்தன்று 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த முஸ்லிம் கொடுங்கோல் அரசனான திப்பு சுல்தான் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் நினைவாக ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில், பிரேம் சிங் மற்றும் பிரவீன் சிங் என்ற இரண்டு ஹிந்து இளைஞர்கள் ஷிவமோகா மாவட்டத்தில் கத்தியால் குத்தப்பட்டனர். இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நதீம், ஜபியுல்லா, அப்துல் ரஹ்மான் மற்றும் தன்வீர் ஜபியுல்லா என அடையாளம் காணப்பட்ட அவர்களில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஜபியுல்லாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.