4 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்

தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வரும் அரசாக செயல்பட்டு வருகிறது. காரின் திசைமாற்றி (ஸ்டீரிங்) ஒவைசியிடன் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும்? கே சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கௌண்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். ஆனால், 2024 தேர்தலிலும் அந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடியே தக்கவைத்துக் கொள்வார். சந்திரசேகர் ராவ் முதலில் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்க வைப்பதில் கவனம் செலுத்தட்டும். தெலுங்கானாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்தால் சர்ச்சைக்குரிய 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்றார்.