ஜிஹாத் வாட்ச் எனும் அமெரிக்க அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 3,200 ஸ்லீப்பர் செல்கள் மற்றும் சுமார் 32 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து கேரளா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு குழு ஒன்று கண்ணூர் மாவட்டம் தானாவில் வசித்து வந்த தற்கொலைப்படை பயிற்சி பெற்ற ஷிஃபா ஹாரீஸ், மிஸா சித்திக் என்ற இரு பெண்களை கைது செய்து விசாரித்தது. அவர்கள்தான், கேரளாவில் சுமார் 3,200 இஸ்லாமிக் ஸ்டேட் ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வருவதையும் ஒவ்வொரு செல்லிலும் 10 உறுப்பினர்கள் வீதம் சுமார் 32,000 பயங்கரவாதிகள் இருக்கலாம் எனவும் அவர்களில் 40% பெண்கள். பணம், வேலைவாய்ப்பு, போதைப்பொருள், உடல் தேவைகள் என பல்வேறு வகையான உத்திகள் மூலமாக இளைஞர்கள், இளம்பெண்கள், படித்தவர்கள் ஈர்க்கப்பட்டு முளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கேரளா முழுவதும் இவர்களின் நெட்வொர்க் பரவி உள்ளது, வெளிப்படையாக செயல்படாமல் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தொடர்புகளும் உள்ளது எனும் அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டு உள்ளனர். இதில் மிஸா சித்திக் என்ற பெண், ஈரான் சென்று அங்கிருந்து சிரியா செல்ல முயசித்துள்ளார். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. ஷிஃபா ஹாரீஸ், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்கு பணம் கொடுத்ததும், அவர்களின் ஏழு பேர் கொண்ட குழு, ஹிஜ்ரா எனும் இஸ்லாமிய முறைப்படி காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.