பாரதத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்படும் செயலிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது பாரதத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட 348 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளை சேர்ந்த செயலிகள் பாரத பயனர்களின் தகவல்களை வெளிநாட்டுக்கு அனுமதியின்றி அனுப்பியதாக தெரியவந்ததை அடுத்து இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எடுத்துள்ளது.