உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது அப்பகுதி முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் வன்முறையை நிகழ்த்தினர். ஊர்வலம் அப்பகுதியில் உள்ள ஒரு மசூதியை நெருங்கியபோது, மசூதியில் இருந்து வெளியே வந்த சில முஸ்லிம்கள், ஊர்வலத்தில் பாடல்களை இசைப்பதை நிறுத்துமாறு கூறி வாக்குவாதம் செய்தனர். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு வந்தனர். ஊர்வலத்தில் வந்த ஹிந்துக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்தனர். அந்த வன்முறை கும்பல், பல வாகனங்களையும் தீ வைத்து எரித்தது. ஒருசில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் நபர்கள் அங்கு கூடி வன்முறையை நிகழ்த்தியது என்பது தற்செயலானதல்ல. அது முன்கூட்டியே நன்றாக திட்டமிடப்பட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர் தற்போது இந்த வன்முறை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், வீடியோ கிளிப்புகள், பொதுமக்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில், 55 வன்முரையாளர்களை அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் அவர்களில் 32 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். மேலும், ஹிந்துக்கள் ஊர்வலத்தின் மீது கற்களை வீசுவதற்கு அவர்களை தூண்டிய மதரஸா ஒன்றின் அதிபர் மற்றும் மௌலவி ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இதனிடையே, மௌலானா மெஹத்ருல் இஸ்லாம் தலைமையிலான தூதுக்குழு ஒன்று, அக்டோபர் 12 அன்று சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்பதை சுட்டிக்காட்டி அதனை கண்டித்தார். ஆனால், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ கிளிப்களின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.