அமெரிக்காவை சேர்ந்த பிரபல அரசியல் ஆய்வாளர், ஆலோசகர் மற்றம் விமர்சகர் இயான் ஆர்தர் பிரிம்மர், இவர் யூரேஷியா குரூப் குழும நிறுவன தலைவராக உள்ளார். இந்திய பாராளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி,
இந்தியா மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடு. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
ஜப்பான் இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன. இத்தேர்தலில் 305 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். பிரதமர் மோடியின் நிலையான சீர்திருத்தத்தின் பின்னணி,, வலுவான பொருளாதார செயல் திறன் ஆகியவற்றால் 2030 ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.