‘‘300 இடங்களில் வெற்றி மீண்டும் பாஜக ஆட்சி’’- பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும், மீண்டும் மோடி அரசு அமையும் என 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் 19-ம் தேதி 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து தொடங்கினேன். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் எனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறேன். இரண்டு பகுதிகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே 1987-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திர போரில் பங்கு பெற்ற பகுதிகளாகும். மீரட்டில் இருந்து தான் நமது வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரில் இறங்கினர். கார்கோனில் பீம்நாயக் தலைமையில் பழங்குடி மக்கள் போரில் இறங்கினர்.

இதற்கு முன்பு நடந்த பல தேர்தல்களில் இருந்து இந்த தேர்தல் மாறுபட்டது. இதுவரை கட்சிக்காகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதன்முறையாக நாட்டிற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். நமது நாட்டில் நல்லாட்சி தொடர வேண்டும், மக்கள் விரும்பும் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தின் கட்ச் முதல் அசாமின் காமரூப் வரை ஒட்டுமொத்த நாடே, மோடி அரசு 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று சொல்கிறது. 19-ந்தேதி வாக்களிப்பதன் மூலம் புதிய வரலாற்றை படைக்க இருக்கிறீர்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக பெரும்பான்மை அரசு நடத்தும் ஆட்சியை தேர்வு செய்ய இருக்கிறீர்கள்.

நான் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற வாக்களிக்கும் அனைவருக்கும் எனது நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

One thought on “‘‘300 இடங்களில் வெற்றி மீண்டும் பாஜக ஆட்சி’’- பிரதமர் மோடி நம்பிக்கை

  1. மோதி என்று எழுத வேண்டுகிறேன்! மோடி என்பது தவறான உச்சரிப்பு! தமிழகத்தில் அவ்வாறு பலர் செய்தாலும் விஜய பாரதம் அப்படி செய்யக்கூடாது!

Comments are closed.