கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23 அன்று கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திற்கு முன்பாக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தற்கொலைப்படை பயங்கரவாதி ஜமேஷா முபின் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பு வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.இவ்வழக்கில் தற்போது ஜமேஷா முபினுடன் சம்பந்தப்பட்ட முகமது தௌபீக், பெரோஸ் கான் மற்றும் உமர் பாரூக் ஆகிய மூவரை கைது என்.ஐ.ஏ செய்துள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, கைது செய்யப்பட்ட இந்த மூவரில், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான் ஆகிய இருவரும் குன்னூரில் உள்ள பாரூக்கின் இல்லத்தில் முபினுடன் கலந்து சதித்திட்டம் தீட்டிய குழுவில் இருந்துள்ளனர், பயங்கரவாத செயல்பாட்டின் ஏற்பாடுகளுக்கும் பயங்கரவாதிக்குமுபினுக்கு ஆதரவளித்தனர். தௌஃபீக்கிடம் இருந்து தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய குற்றவியல் புத்தகங்கள்’ மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது குறித்த கையால் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னதாக இந்த வழக்கு என்.ஐ.ஏவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் தமிழக காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு முபினின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்ததுடன், அவரது வீட்டில் இருந்து சுமார் 75 கிலோ வெடிபொருட்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.