27 சதவீதம் ஆதார் இணைப்பு

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட்1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக ‘6பி’ என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவுஅலுவலரை அனுப்பி, விவரங்களை பெற்று வருகிறது. இதைத்தவிர, https://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் ‘1950’ என்ற தொலைபேசி எண் ஆகியவை மூலமாக ஆதார் இணைப்பு பதிவு மேற்கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் உள்ள பிளேஸ்டோரில் ‘வோட்டர் ஹெல்ப் லைன்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.22 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆதார் இணைப்பு பணி தொடங்கப்பட்ட நாள் முதல் ஆகஸ்ட் 31ம்தேதி வரை 1.66 கோடி பேர் (26.78 சதவீதம்) தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.