அசாம் மாநிலத்தில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் கம்யூனிச பயங்கரவாத குழுக்களை சேர்ந்த ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு மற்றும் திவா லிபரேஷன் ஆர்மி ஆகிய இரு வேறு பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த 246 பேர் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அவர்களிடம் இருந்து இருந்து 277 துப்பாக்கிகள், 720 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், பாரக் பள்ளத்தாக்கில் இரண்டு புரூ ரியாங் குழுக்கள் வரும் நாட்களில் சரணடையும். அதற்கான நடவடிக்கையை முடித்து பிப்ரவரிக்குள் தீர்வு காண முயற்சித்து வருகிறோம் என கூறினார்.