“2024 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சமூக நலன், நிதி ஒதுக்

கீடுகள் மற்றும் பொருளா
தார முன்னேற்றம்” ஆகிய
வற்றை அடிப்படையாக கொண்டுள்ளது  இந்த  பட்ஜெட்.

  தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்
பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உற்பத்தி மேம்பாட்டுக்குப் பிரதானமாக உள்ளன.ஏனெனில், இது உணவு பாது
காப்பை உறுதிப்படுத்தும்.

  விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி  விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் அடுத்த இரண்டு ஆண்டு
களில், ஒரு கோடி விவசாயி
களை இயற்கை விவசாயத்
திற்கு ஈடுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில் டிஜிட்டல் புரட்சி செய்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயி
களுக்கு உதவுவதற்கான அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.

முக்கியமாக, 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்களை அறிமுகப்படுத்து
வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்
படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படும். விவசாயத்தின் இயற்கை முறைகளைப் பற்றிய அறிவை பெருக்கி, விவசாயிகளை புதிய முறைகளைப் பயன்படுத்தத் தூண்டும்.

முத்ரா கடன் திட்டம்:

  முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கும் கடன் தொகையின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது (முன்பு கடனை சரியாக செலுத்தியவர்களுக்கு).

  ஊரக வளர்ச்சி: ₹ 2.66 லட்சம் கோடி: ஊரக மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, கிராமப்புற அடிக்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்குப் பயன்படும்.

பிரதமர் கரீப் அன்ன யோஜனா:

நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும்

உள்கட்டமைப்பு :

  சென்னை – விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வணிக மற்றும் பயண வசதிகளை மேம்படுத்தும்.

  நாளந்தா சுற்றுலா மைய மேம்பாடு.

  விஷ்ணுபாத், மகாபோதி கோயில், சமண கோயில் மேம்பாடு.

  இது மாநிலங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் மற்றும் வளர்ச்சியை உற்பத்தி செய்யும்.

  பிகாரில் 3 அதிவேக சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  கங்கா ஆற்றின் மேல் புதிய இருவழிச்சாலைப் பாலம் அமைக்கப்படும்.

  பிகாரில் விமான நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

  நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் குறித்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படும்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு :

இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEகள்) தங்களுக்கு தேவையான, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.

புதிய வருமான வரி விகிதங்கள்:

  ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை: 5%

  ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை: 10%

  ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை: 15%

  ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை: 20%

  ரூ.15 லட்சத்திற்கு மேல்: 30%

இந்த பட்ஜெட் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் பயனளிக்கின்றது, பொருளாதார வளர்ச்சிக்கான நல்ல அடித்தளங்களை அமைக்கிறது.           F