2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என ஐ.நா., வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வெளியான அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2024ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். இதுவே 2023ம் ஆண்டு 6.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் உள்நாட்டு தேவை, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் வளர்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 2024லும் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும்.
அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் உந்தப்பட்டு 2023ல் இந்தியா வலுவான முதலீட்டை பெற்றது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகளில் முதலீடு சிறப்பானதாக இருந்தது. 2023ல் தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருந்தது. இவ்வாறு ஐ.நா.,வின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.