ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையைச் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவரும் யோசனையும் முன்வைக்கப்படலாம். மேலும், பெரும்பாலான நடுத்தர ஓட்டல்கள் ஜி.எஸ்.டி வரியை வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவிட்டு அவற்றை அரசுக்கு கட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இவ்வகையில் ரூ. 2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி இந்த மோசடிகள் நடந்துள்ளது. எனவே ஓட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்தும் முடிவு எடுக்கப்படலாம்.