மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 102 (1,02,05,09,915) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 10.72 (10,72,90,010) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் கையிருப்பில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.