1,008 லிங்கம் சிவாலயத்திற்கு ‘மெகா சைஸ்’ மணி தயார்

நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன், 64. இவரது நிறுவனத்தில் பல்வேறு வடிவங்களில், எடையில் கோவில் மணிகள் தயாரிக்கப்படுகின்றன. அயோத்தி ராமர் கோவிலுக்கு இவர் தயாரித்து வழங்கிய கோவில் மணிகள் அங்கு ஒலிக்கின்றன.

இந்நிலையில், சேலம் மாவட்டம், அரியானுாரில் உள்ள, 1,008 லிங்கம் கொண்ட சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய, 1.5 டன் எடையில், மணி தயாரிக்க, ‘ஆர்டர்’ வழங்கப்பட்டது. இதையடுத்து, தினமும், 10 பேர் வீதம், 30 நாட்கள் பணியாற்றி இந்த, ‘மெகா சைஸ்’ கோவில் மணியை தயாரித்துள்ளனர்.

ராஜேந்திரன் கூறியதாவது: இந்த மணியின் விலை, 45 லட்சம் ரூபாய். வழக்கமாக, கோவில் மணிகளுக்கு தங்க மூலாம் பூசுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதன் முறையாக இங்கு, இந்த கோவில் மணிக்கு பாலிஷ் போடப்பட்டுள்ளது. இந்த பாலிஷ், மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.