1990களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காலம் காலமாக வாழ்ந்துவந்த ஹிந்து பண்டிட்டுகளை முஸ்லிம் பயங்கரவாதிகள் அரசின் துணையுடன் எப்படி திட்டமிட்ட முறையில் கொன்றார்கள், எப்படியெல்லாம் சித்ரவதை செய்தனர் என்பதையும் ஒரே இரவில் தன் சொந்த நாட்டிலேய அகதிகளாக அவர்கள் மாற்றப்பட்ட கொடூரத்தையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளது தி காஷ்மீர் ஃபைல்ஸ். உலகெங்கிலும் திரையிடப்பட்ட இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் இப்போதே அந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. “பல முன்னணி நடிகர்களின் படங்களையும் தாண்டி வசூல் செய்து வரும் இத்திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் வசூலில் ஆதிக்கம் செலுத்தும் என நினைக்கிறேன். இது அலை அல்ல இது ஒரு இயக்கம். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஹிந்தி திரைப்பட வணிகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது” என்று பிரபல பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.