புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு

தமிழகத்தில் மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை விட, கூடுதலாக புதுச்சேரியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., இடங்களில், சி.பி.எஸ்.இ., – மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தான் அதிக இடங்களை பெற்று வந்தனர். மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதையே, தற்போது திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழகத்தை விட புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, முதல்வர் ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் பரிந்துரை செய்துள்ளார். 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு புதுச்சேரி அனுமதி வழங்கும் பட்சத்தில், தமிழகத்தில் மருத்துவ படிப்பில் பயன் அடையும் அரசு பள்ளி மாணவர்களை விட அதிகம் பேருக்கு ‘லக்’ காக அமையும்.