பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.28 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செயல்திறன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா பொதுமுடக்கத்தால் இப்பணிகள் தாமதமானது. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை மார்ச் 2024 வரை தொடர மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், வீடுகள் சரியான நேரத்தில் கட்டி முடிப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சகம் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறது. இதற்கான நிதியுதவி குறைந்தபட்சம் மூன்று தவணைகளில் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. மாநிலங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பிற தடைகளுக்கு விரைவான தீர்வு காணப்படுகிறது.